Sunday, May 04 01:06 pm

Breaking News

Trending News :

no image

5 வருஷம் குடும்பம் நடத்தி ஏமாற்றிய முன்னாள் அமைச்சர்.. கதறும் நாடோடிகள் பட நடிகை…!


சென்னை: 5 வருஷம் தம்முடன் குடும்பம் நடத்திவிட்டு இப்போது திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார் என்று முன்னாள் அமைச்சர் மீது பகீர் புகாரை கிளப்பி இருக்கிறார் நாடோடிகள் பட நடிகை.

நாடோடிகள் படத்தில் நடித்தவர் சாந்தினி. படத்தில் சசிகுமாரின் நண்பரின் காதலியாக வருவார். அவரையும், அவரது நண்பரையும் கல்யாணம் செய்து வைத்த பின்னர் தான் சசிகுமாரும் மற்றவர்களும் பல்வேறு கஷ்டங்களை சந்திப்பார்.

சென்னை கமிஷனர் அலுவலகம் வந்த நடிகை சாந்தினி பகீர் புகார் ஒன்றை கிளப்பி இருக்கிறார். கல்யாணம் செய்து கொள்ளாமல் தம்முடன் 5 ஆண்டுகள் குடும்பம் நடத்திவிட்டு இப்போது திருமணம் செய்து கொள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஏமாற்றிவிட்டார் என்பது அவரின் புகார் ஆகும்.

தமது புகார் குறித்து அவர் மேலும் கூறியதாவது: திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டால் அந்தரங்க போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என்று முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மிரட்டுகிறார். கூலிப்படையை ஏவிவிட்டு கொல்ல துடிக்கிறார் என்று கூறி உள்ளார்.

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர். ஜெயலலிதா அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தவர். டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்ததால் அமைச்சர் பதவியை இழந்தவர் பின்னர் அரசியலில் இருந்தே ஓரம்கட்டப்பட்டார். இப்போது அவர் மீது நடிகை ஒருவர் பாலியல் வன்புணர்வு புகார் கூறி இருப்பது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Most Popular