Sunday, May 04 12:25 pm

Breaking News

Trending News :

no image

பெட்ரோல், டீசல் விலை ஜாஸ்தியா..? கவலைப்படாதீங்க..! சிக்கன் வேஸ்ட் இருக்கு


திருவனந்தபுரம்: சிக்கன் கழிவில் இருந்து பயோ டீசலை உற்பத்தி செய்து கேரள இளைஞர் ஒருவர் அசத்தி உள்ளார்.

நாடு முழுவதும் இப்படி நடக்கும் என்று யாரும் நினைத்து பார்க்கவில்லை. பெட்ரோல், டீசல் விலை அநியாயத்துக்கு உயருகிறது என்று மக்கள் புலம்புவதை கேட்க முடிகிறது.

ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்கிறது. தொடரும் இந்த விலை வாகன ஓட்டிகளை அலற வைத்துள்ளது. விலையேற்றத்தால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உச்சத்தை நோக்கி நகர ஆரம்பித்து உள்ளது.

இந் நிலையில் பெட்ரோல், டீசல் விலையால் கதறும் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக கேரள இளைஞர் ஒருவர் பயோ டீசலை தயாரித்துள்ளார். அவரது பெயர் ஜான் ஆபிரகாம். இவர் தயாரித்திருக்கும் பயோ டீசல் நமக்கு ஆச்சரியத்தை தருகிறது.

சிக்கன் வேஸ்ட்… அதாவது கோழிக்கழிவில் இருந்து பயோ டீசலை தயாரித்துள்ளார். 7 ஆண்டு கால முயற்சிக்கு பின்னர் அவர் இதை சாதித்து உள்ளார்.

இந்த பயோ டீசல் உற்பத்திக்கு அவர் காப்புரிமை பெற்றுள்ளது கூடுதல் சிறப்பு. அடுத்து வரக்கூடிய காலங்களில் இந்த பயோடீசலை குறைந்த விலைக்கு விற்க உள்ளதாக அவர்  கூறி உள்ளார்.

100 கிலோ கோழிக்கழிவில் இருந்து 1 லிட்டர் பயோ டீசல் தயாரிக்கலாம் என்றும் 38 கிலோமீட்டர் வரை வாகனங்களில் மைலேஜ் கிடைக்கும் என்று கூறுகிறார் சாதனை இளைஞர் ஜான் ஆபிரகாம். மஞ்சள் கலரில், வழக்கமான நாம் அன்றாடம் பயன்படுத்தும் டீசல் போன்று உள்ளது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

Most Popular