Sunday, May 04 12:59 pm

Breaking News

Trending News :

no image

ரெடியா..? பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை வம்பிழுத்த பாஜக அண்ணாமலை…!


சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வு விவகாரத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி இருக்கிறார்.

எப்போது குறையும் என்று யாருக்கும் தெரியாது… எப்போது ஏறும் என்று யாருக்கும் தெரியாது. அது தான் பெட்ரோல்,டீசல் விலையின் தற்போதைய நிலை. இப்போது பெட்ரோல் 100 ரூபாயை கடந்து விற்பனையாகிறது. டீசல் ஒரு லிட்டர் 100 நோக்கி நகர்ந்து வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் விண்ணை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. காய்கறி, அரிசி என பல பொருட்கள் விலை ஏறிக் கொண்டிருக்கிறது.

பெட்ரோல், டீசல் விலை குறைய வேண்டும் என்றால் இவை இரண்டையும் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளது. திமுக சட்டசபை தேர்தலின் போது பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என்று அறிவித்தது. ஆட்சியில் அமர்ந்தால் பெட்ரோல் 5 ரூபாய், டீசல் 4 ரூபாய் குறைப்பதாக கூறியது.

ஆனால் ஆட்சியில் அமர்ந்த பின்னால் அதுபற்றிய பேச்சே காணோம்.. இப்போதைக்கு விலையை குறைக்க முடியாது என்று அறிவித்தது. நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் இந்த கைவிரிப்பு தமிழக மக்களை வெகுவாக ஏமாற்றியது.

இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை பற்றி பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வம்பிழுத்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள டுவிட்டர் பதிவில் கூறி உள்ளதாவது:

மத்திய அரசு பெட்ரோல்,டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரத் தயார் ; தமிழக நிதியமைச்சர் ஒப்புக்கொள்வாரா? எதிர்கட்சியாக திமுக இருந்த போது சொன்னதை இப்போது செய்ய தயாரா? - மாநில தலைவர் திரு.@annamalai_k என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் மத்திய அரசு கொண்டு வரும் என்று அண்ணாமலை அறிவித்துள்ளது, அடுத்த கட்ட அரசியல் நகர்வுக்கு அச்சாரமாகி இருக்கிறது. ஒருவேலை மத்திய அரசு இவ்வாறு அறிவித்தால் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? உரிய பதில் தருவாரா பிடிஆர்..? என்ற கேள்விகளும் அனைவர் மத்தியலும் எழுந்துள்ளது.

Most Popular