செரிமான பிரச்னையா...? அப்போது இந்த நண்பனை உங்க பக்கத்துல வச்சுக்குங்க..!
முக்கனிகளில் ஒன்று வாழைப்பழம். இதனை ஏழையின் நண்பன் என்றும் கூறுவர்.தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இவை உணவு செரிமானத்துக்கு பெரிதும் உதவுகிறது. அதுமட்டுமின்றி மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது.
மேலும் வாழைப் பழத்திற்கு மஞ்சள் காமாலை மற்றும் சளி, காய்ச்சலை குணப்படுத்தும் தன்மை உள்ளது. வாழை பழ ரங்கங்களிலிலேயே கற்பூரவள்ளி மிகவும் இனிப்பானது.
இதில் நார் சத்துக்கள் அதிகம் உள்ளதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது. மேலும் இதனை தினமும் சாப்பிடுவதன் மூலம் உடல் சூட்டை தணித்து உடலுக்கு தேவையான ஜீரண சக்தியை அதிகரிக்க செய்கிறது. மேலும் இது கண்ணுக்கு குளிர்ச்சி தருகிறது.