இந்த வெல்லம் இருக்கே.. உங்க வியாதி எல்லாத்தையும் வெல்லும்...!
வெல்லத்தில் இரும்புச்சத்து, நார்ச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்து உள்ளது. மேலும் தினமும் சிறிது வெல்லத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள இரத்தத்தின் அளவை அதிகரிக்க செய்யும்.எனவே வெல்லம் பெண்களுக்கு மிகவும் நல்லது.
வெல்லம் சாப்பிடுவதன் மூலம் ஞாபக மறதியை தடுக்கலாம். அது தவிர ஆஸ்துமா நோயாளிகளுக்கு வெல்லம் ஒரு சிறந்த மருந்தாகும். மேலும் இது உணவுக் குழாய், வயிறு, நுரையீரல் என உடலின் உள் உறுப்புகளை சுத்தம் செய்ய கூடியது. அதனால் தான் சிலர் உணவு சாப்பிட உடன் சிறிது வெல்லம் எடுத்துக் கொள்கின்றனர். ஏனெனில் இது செரிமானத்தை தூண்டிவிடும்.