Sunday, May 04 12:41 pm

Breaking News

Trending News :

no image

இருமலுக்கு எதிரி இந்த புதினா ரசம்...! குடிச்சு பாருங்க, குதூகலம் ஆகிடுவீங்க...!


சளி, இருமல், மூக்கடைப்பு போன்ற தொந்தரவுகளுக்கு நல்ல மருந்து புதினா. அதிலும் புதினாவுடன் மிளகு , சீரகம் தட்டி போட்டு ரசம் வைச்சா எப்படி இருக்கும். இந்த ரசத்தை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவது தான் ஸ்பெஷல்.

தேவையான பொருட்கள்:

தக்காளி – 2

புதினாஒரு கப்

புளிதேவையான அளவு

எண்ணெய்ஒரு டிஸ்பூன்

மிளகுஒரு டிஸ்பூன்

சீரகம்ஒரு டிஸ்பூன்

மஞ்சப்பொடி – ¼ டிஸ்பூன்

உப்புதேவையான அளவு

கறிவேல்லிலைசிறிதளவு

கொத்தமல்லிசிறிதளவு

தாளிக்க தேவையான பொருட்கள்:

எண்ணெய்ஒரு டிஸ்பூன்

கடுகு – ½ டிஸ்பூன்

சீரகம் – ½ டிஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 1

செய்முறை:

புதினா மற்றும் தக்காளி பாதியை நன்கு அரைத்து கொள்ளவும் . கடாயில் எண்ணெய் ஊற்றி அரைத்த புதினா பேஎஸ்ட், புளி தண்ணீரை ஊத்தி காய்ச்ச வேண்டும்.  கிண்ணத்தில் மீதி தக்காளியை கரைத்து அரைத்த மிளகு  சீரகத்தை சேர்த்து கொள்ள வேண்டும்.

ஒரு கப் தண்ணீர் சேர்க்க வேண்டும். சிறிது அளவு உப்பு , கறிவேப்பிலை சேர்த்து வதக்கி வைத்துள்ள புதினாவை சேர்க்க வேண்டும். மஞ்சள்தூள் மறக்காமல் சேர்கக வேண்டும்.

பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து தீயில் 5 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். பொங்கி வரும் நேரத்தில் ½ கப் தண்ணீரை ஊற்றி அணைத்து, கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தாளித்து ரசத்தில் ஊற்றி கொள்ளலாம்.

Most Popular