இரும்புச்சத்து வேண்டுமா..? அப்ப இதை நறுக்கி சாப்பிடுங்க...!
பனங்கிழங்கில் நிறைந்திருப்பது முழுக்க, முழுக்க நார்ச்சத்து தான். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டி, அதிக வலு சேர்க்கும்.
பனங்கிழங்கை வேகவைத்த பின்னர், சின்ன, சின்ன துண்டுகளாக நறுக்கி காய வைக்கலாம். அதோடு கொஞ்சம் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால் இரும்புச்சத்து கிடைக்கும்.
பனங்கிழங்கை தேங்காய்ப் பாலுடன் சேர்த்து சாப்பிடுவதால் பெண்களின் கர்ப்பப்பை பலம் பெறும். உடலின் அனைத்து உறுப்புகள் பலம் பெறும்.
அதுமட்டுமின்றி பனங்கிழங்கில் குளிர்ச்சி தன்மை உள்ளதால் உடல் வெப்பத்தை அருமையாக கட்டுப்படுத்தும்.