Sunday, May 04 12:00 pm

Breaking News

Trending News :

no image

சப்பாத்தி சாப்பிட்டிருப்பீங்க...? உளுந்து சப்பாத்தி செய்து சாப்பிட்டிருக்கீங்களா..?


சப்பாத்தியை பிடிக்காதவங்க யாரும் இருக்கவே முடியாது. காரணம் அதில் உள்ள சத்துகள் அப்படி. சப்பாத்திக்கு தொட்டுக்க ஏகப்பட்ட ஜோடிகள் இருக்கு. எதுவுமே பிடிக்காதவங்க ஜாம் தொட்டு சாப்பிடுவாங்க... இன்னும் சிலர் பால் ஊற்றி சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு மகிழ்வார்கள். ஆனா உளுந்து சப்பாத்தி செய்து பார்த்திருக்கிறீர்களா- இப்போ பார்க்கலாம்...

உளுந்து சப்பாத்தி / தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு – ஒன்றரை கப்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் - 6 டேபிள்ஸ்பூன்

உளுந்து மசாலா - தேவையான அளவு

செய்முறை:

கோதுமை மாவை சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து வைத்து கொள்ளவும். பின்னர் அந்த மாவைச் சிறிய சப்பாத்திகளாக இட்டு நடுவில் சிறிதளவு உளுந்து மசாலாவை வைத்து மூடவும். மறுபடியும் அவற்றை சப்பாத்திகளாக கவனமுடன் தேய்க்கவும். தவாவில் எண்ணெய்விட்டுச் சுட்டெடுக்கவும்.

முக்கிய குறிப்பு(தேவைப்பட்டால்): இந்த சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை. வேண்டும் என்பவர்கள் தயிர்ப்பச்சடி, குருமாவுடன் சேர்த்து கொள்ளலாம்.

Most Popular